அமெரிக்காவின் புகழ்பெற்ற சிறந்த பல்கலையில் ஒன்றான ஹார்வர்டு பல்கலை தேர்வில் 170க்கு 171 மார்க் பெற்று இந்திய மாணவர் ஆங்குர் கார்க் சாதனை செய்துள்ளார்.
22 வயதிலேயே இவர் ஏற்கனவே இந்தியாவில் ஐ.ஐ.டி முதல் இடம் பிடித்தவர். ஐஏஎஸ் தேர்விலும் முதல் இடம் பிடித்து சாதித்தவர். இப்போது ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் மேக்ரோ எகனாமிக்ஸ் பாடத்தின் பொது நிர்வாகத்தில் 170ற்கு 171 மார்க் எடுத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இது பற்றி குறிப்பிட்ட புகழ்பெற்ற சர்வதேச மேக்ரோ பொருளாதார வல்லுனரான ஜெப்ரி பிராங்கெல், இப்படி மார்க் பெற்றதில் தவறு இல்லை.என்று ஆங்குரின் தேர்ச்சி அறிக்கையில் கையெழுத்திட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து ஆங்குர் கர்க், முகநுாலில் பதிவிட்டுள்ளதாவது: நான் பள்ளியில் படிக்கும் போது எனது தந்தை 10க்கு 10 மார்க் எடுப்பது பெரிதல்ல. 10க்கு 11 வாங்குவதே பெருமை எனக்கூறியிருந்தார். அது எனது வாழ்வில் மிக முக்கியமான லட்சியமா எடுத்து கொண்டேன். அந்த லட்சியத்தை இன்று அடைந்துவிட்டேன். நான் புதுடில்லி ஐ.ஐ.டியில் படித்த போது எனக்கு ஐ.ஏ.எஸ் தேர்வை தவிர வேறு சிந்தனை இல்லை. எனது கனவு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே. இந்த கனவை அடைவதற்கு பொறியியல் கல்வி ஒரு படிக்கல் போன்றது என மகிழ்ச்சியுடன் பதவிட்டுள்ளார்
No comments:
Post a Comment