எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

17A, 17B நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது -இயக்குநர் உத்தரவு

Tuesday, January 15, 2019




அரசு பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால், நடவடிக்கைக்கு உள்ளானோருக்கு, பதவி உயர்வு கிடையாது என, இயக்குனர் ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப விண்ணப்பிக்குமாறு, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், முதுகலை ஆசிரியராக இருந்தால், 2003ம் ஆண்டு வரை நடந்த, டி.ஆர்.பி., தேர்வு மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக, 2013ல் பதவி உயர்வு பெற்றவர்கள், இதற்கு விருப்பம் தெரிவிக்கலாம். மாவட்ட கல்வி அதிகாரியாக விரும்பினால், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு விருப்பம் தெரிவிக்க கூடாது.ஒரு பதவி உயர்வுக்கு, மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு, பதவி உயர்வுக்கு விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை, முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டுமென, சுற்றறிக்கை மூலம் இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இச்சுற்றறிக்கையில், '17-ஏ' மற்றும் '17-பி' என்ற, அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக, விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு, பதவி உயர்வு கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு ஆளானோர் விண்ணப்பங்கள் பரிந்துரைத்தால், உரிய முதன்மை கல்வி அலுவலர் மீது, நடவடிக்கை பாயும் என குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One