எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இந்த பாஸ்போர்ட் இருந்தால் 190 நாடுகளுக்கு விசா வேணாம்

Thursday, January 17, 2019



சர்வதேச அளவில் மிகச்சிறந்த பாஸ்போர்ட்டாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் 79வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சர்வதேச அளவில் அதிக நாடுகளுக்கு குறைந்த விசா கெடுபிடிகளுடன் செல்ல உதவும் பாஸ்போர்ட்டுகள் பட்டியலில், ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் உலகின் 190 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா எடுக்காமல் செல்லலாம். இந்தப் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு 61 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா இல்லாமல் செல்லலாம் என்பது குறிப்பித்தக்கது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா நாடுகள் உள்ளன. இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருந்தால், 189 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா இல்லாமல் செல்லலாம். 2017ம் ஆண்டில் 85வது இடத்தில் இருந்த சீனா, 69 வது இடத்திற்கு இந்த ஆண்டு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபால் 94வது இடத்திலும், பாகிஸ்தான் 102வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 104வது இடத்திலும் உள்ளன

ஹென்லி குழுமம், உலகம் முழுவதும் உள்ள பாஸ்போர்ட்டுகள் மற்றும் பல்வேறு நாடுகளின் விமான ஆணையங்களின் தகவல்களை ஆய்வு செய்து, அதன் மூலம் இந்த பட்டியலை ஆண்டு முழுவதும் தயாரித்து வருகிறது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One