எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம்

Wednesday, January 30, 2019




பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் போராட்டத்தால், பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன. ஆனால், தனியார் பள்ளிகளில், தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, மாணவர்கள் தயார் செய்யப்படுகின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, பிப்., 1 துவங்கி, 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு முன், மாணவர்களின் அகமதிப்பீட்டுக்கான பட்டியலை தயாரிக்கவும், அகமதிப்பீட்டுக்கு, மாணவர்களின் செய்முறை நோட்டுகளை மதிப்பிடவும், தேர்வு துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.நாளை மறுநாள் துவங்க உள்ள, செய்முறை தேர்வுகளுக்கு, வேறு பள்ளிகளில் இருந்து, மதிப்பீட்டு ஆசிரியர்களை நியமித்து, கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்; எந்த முறைகேடுகளுக்கும் இடம் அளிக்கக் கூடாது. ஆசிரியர்கள், தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை, மாணவர்களுக்கான தேர்வு நடத்துவதில் காட்டக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 1க்கு புதிய தேதிஇந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிப்., 13 முதல், 22 வரை, செய்முறை தேர்வு நடத்தி, உரிய மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி நேற்று தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One