எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி

Saturday, January 19, 2019




சென்னை அரசு பள்ளிகளில், வரும், 22ம் தேதி, கலையருவி போட்டிகள் நடத்துமாறு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய கலை மற்றும் பண்பாட்டை மாணவர்கள் அறியும் வகையில், மத்திய மனித வள அமைச்சகம் சார்பில், 'கலா உத்சவ்' நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.அதேபோல், தமிழகத்திலும், இரண்டாம் ஆண்டாக, வரும், 22 முதல், கலையருவி போட்டிகள் நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 22ல், பள்ளி அளவிலான போட்டி; 24ல், கல்வி மாவட்ட போட்டி; 28ம் தேதி, வருவாய் மாவட்ட போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், தேர்வாகும் மாணவர்கள், மாநில போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவியம் வரைதல், பேச்சு, கட்டுரை, வண்ணம் தீட்டுதல், மெல்லிசை, குழு நடனம் உட்பட, 21 வகை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 25 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One