தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
2 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தினார்கள். இதை ஏற்று அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு அரசிடம் இருந்து வரும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரையில் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனையடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது
No comments:
Post a Comment