எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

Tuesday, January 22, 2019




தமிழகத்தில் முதன்முறையாக, ஒசூர் அருகேயுள்ள அரசுப்பள்ளி ஒன்றில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மதிய உணவு திட்டம் தொடங்கி  செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இதனால் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து கல்வி விகிதம் அதிகரித்து வருகிறது.
 இந்தநிலையில், ஒசூரை அடுத்த சாமனப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மதிய உணவு திட்டத்தைப் போல், காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 திட்டத்தை தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
 தொடர்ந்து சூளகிரி , தளி பகுதிகளில் உள்ள 70 அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 இந்த திட்டத்தின் மூலம் சுமார் எட்டாயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்

1 comment

  1. எங்கள் பள்ளியில் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்த காலை உணவு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ ராமதனலட்சுமி ஆரம்பப்பள்ளி,
    கட்டுவிநாயகர் கோவில் தெரு,
    இராஜபாளையம்.விருதுநகர் மாவட்டம்

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One