பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் வரை மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்கீழ் கடந்த 2012ல் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 16 ஆயிரத்து 549 பேர் ஆசிரியர்களாக தொடக்க கல்வித்துறையில் நியமிக்கப்பட்டனர். முதலில் இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கினர். பின்னர் ரூ.7500 என ஊதியம் வழங்கி வருகின்றனர். இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியுள்ளனர். தற்போது 12 ஆயிரம் பேர் தான் இந்த பணியில் நீடிக்கின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, சிறப்பு ஆசிரியர்களாக பணி நிரந்தரம் கேட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஒவ்வொரு பகுதி நேர ஆசிரியர்களுக்கும் ரூ.45700 இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 7வது ஊதியக் குழுவில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு என்று அரசாணை வெளியிட்டும் இது வரை தமிழக அரசு வழங்கவில்லை. ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் அவர்களுக்கு பதிலாக எங்களை பள்ளிகளில் பயன்படுத்திக் கொண்ட அரசு எந்த ஊதியமும் வழங்கவில்லை. எல்லா வகையிலும் அரசுக்கு பயன்பட்டு வரும் எங்களை ஊதிய உயர்வுடன் சிறப்பு ஆசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரம் மற்றும் தொழிலாளர் சேமநிதி, இஎஸ்ஐ, போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, விடுமுறை சலுகைகள் உள்ளிட்ட அடிப்படை சலுகைகள் ஆகியவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவனுங்களையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இப்படி 16000 குடும்பத்தையும் நோகடிக்கவே இப்படி போஸ்டிங் போட்ட அந்த அம்மாவையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. எல்லாருமே வயது அதிகமானவர்கள் அப்படின்னு தெரிஞ்சும் பிள்ளை குட்டிகள் அவர்களுக்கும் உண்டுன்னு தெரிஞ்சும் இப்படி 7700 ருபாய் மட்டும் கொடுத்து பகுதி நேரம் மட்டுமே வேலைன்னு சொல்லி முழு நேரம் மட்டுமல்லாது வீட்லயும் வேலை செய்ய சொல்லி இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் அந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அணைத்து வேலைகளும் கணிப்பொறி மூலமாக முடித்து டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற நினைக்கிற கல்வித்துறை அதிகாரிகள் , முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்ட கல்வி அதிகாரிகள் , தலைமை ஆசிரியர்கள் என இவர்களுக்கும் எங்கள் கஷ்டம் தெரிவதில்லை. வேலையை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க மட்டுமல்லாது எங்களை 11 12 வகுப்பிற்கு பாடம் நடத்த மற்ற பள்ளிகளுக்கும் டெபுடேஷன் போடும்போது கண்களுக்கு தெரியும். மற்ற நேரங்களில் நாங்கள் திட்ட வேலை பணியாளர்கள். அப்படி என்னடா திட்டம்? எங்களுக்கு வயிறு உண்டுன்னு தெரிஞ்சும் எங்க வயித்துல அடிக்காதீங்க. பதினாறாயிரம் குடும்பங்களும் இதை நம்பி பட்டினி கெடக்குறோம். மனசாட்சி யோட எண்ணி பாருங்க. தனியாரை சொல்றேன்ங்க குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு கொடுங்கன்னு. அதை விட நீங்க நர்ஸ் போலீஸ் என எல்லா போஸ்டிங் இப்படி போட்டு மொத்த பணத்தையும் வரின்னு பிடுங்கி.... அப்படியும் நிதி பற்றாக்குறை. அப்புறம் இத்தனை கோடி அங்க பிடிபட்டது இத்தனை கோடி இங்க பிடிபட்டது ன்னு செய்தி மட்டும் போடுறீங்க. இதெல்லாம் எப்புடி?
ReplyDelete