எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Wednesday, January 30, 2019




போராட்டத்தை கைவிட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளையே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப கேட்டுகொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.

மேலும்7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிலும் ஊதியக்குழு அமைக்கப்பட்டது எனஅவர் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மக்கள் பணியை தொய்வின்றி நாம் மேற்கொள்வோம். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று நாளையே பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனுக்காக மாநில அரசு செயல்படவேண்டும், இதில் என்னோடு அரசு ஊழியர்களுக்கும் பங்கு உண்டு. நாம் ஒன்றுபட்டு உழைத்தால் தான் ஏழைஎளிய மக்களை மேம்படுத்த முடியும். அ.தி.மு.க., அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை என்றும் புறந்தள்ளியது கிடையாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One