ஈரோட்டில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் விழாவில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும் பொழுது, ஏழை மக்களின் குழந்தைகளின் நலனை கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப்பெற நாங்கள் கண்ணீர் சிந்துவதை தவிர வேறுவழி இல்லை. ஆசிரியர்களின் போராட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் ஆசிரியர், ஆசிரியைகள் பணிக்கு வரவில்லை எனில் தகுதித் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேர் தயாராக உள்ளனர் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment