திருவண்ணாமலை: தேசிய குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுடன் ரயிலில் பயணம் செய்தவாறு, கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் 21 முதல், 25ம் தேதி வரை, தேசிய குழந்தைகள் வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நேற்று திருவண்ணாமலையில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்பதை வலியுறுத்தி, 200 பள்ளி மாணவ - மாணவியருடன் வேலுார் வரை, ரயிலில் பயணம் செய்து, கலெக்டர் கந்தசாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வேலுார் கோட்டைக்கு சென்ற மாணவர்கள், அங்கு வந்த மக்களிடம், பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
No comments:
Post a Comment