எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புத்தாண்டு கொண்டாட்டமே புத்துணர்ச்சி கொடுக்குமே! இன்றைய சபதங்கள், நாளைய சாதனைகள்

Tuesday, January 1, 2019




நிகழும் விளம்பி ஆண்டு, மார்கழி மாதம், 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை. குரு பகவானின் ஆதிக்கத்தில், தட்சிணாயனம் ஹேமந்தருதுவில், கிருஷ்ணபட்சம், தசமி திதியில், சமநோக்குக் கொண்ட சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னம், அமிர்தயோக நன்னாளில், நள்ளிரவு, 12:௦௦ மணிக்கு, ஆங்கிலப் புத்தாண்டு, 2019 பிறக்கிறது.ஜனவரி 1ம் தேதி தான், ஆண்டின் ஆரம்பம் என்ற நிலைப்புத் தன்மை வருவதற்கு முன், 2000 ஆண்டுகளுக்கு முன், மார்ச், 25ம் தேதியும், ரோமானியர்களின், மார்ச், 1ம் தேதியும், 10 மாதங்கள் தான் ஒரு ஆண்டு என்றிருந்ததை, 12 மாதங்களாய் மாற்றியும், ஜனவரி, பிப்ரவரி எனப் பெயரிட்டும், இப்படியாக பல கட்டங்களைத் தாண்டி, இப்போது நாம் பின்பற்றும், ஜனவரி 1ம் தேதியை, புத்தாண்டாக கடைப்பிடித்து வருகிறோம்.ஆங்கில புத்தாண்டு என்பது, 500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. போப், 13ம் கிரிகோரி ஜூலியன், காலண்டரை ரத்து செய்து, நான்காண்டுகளுக்கு ஒரு, 'லீப்' ஆண்டு எனக் கூறி, அந்த லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு, 29 நாட்கள் என, 365 நாட்களையும், 12 மாதங்களுக்கு மிகச் சரியாக அடக்கினார். அதில், அறிவியல் உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும், 'கிரிகோரியின் காலண்டர்' முறை பின்பற்றப்பட்டது.
ஜனவரி என்ற பெயர், ரோமானிய மன்னர் ஜனஸின் பெயரிலிருந்து வந்தது. ரோமன் இதிகாசத்தில், துவக்கங்களின் கடவுளாக காணப்பட்ட, ஜானஸ் லானுரியஸ் என்ற கடவுளின் பெயரே, கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான, ஜனவரிக்கு வழங்கப்படுகிறது.ஆங்கிலப் புத்தாண்டு, தமிழர்களால் மட்டுமின்றி, வேறு இனத்தவர்களாலும் கொண்டாடப்படும், முக்கிய சிறப்பு தினம். ஆனால், இப்படி ஆங்கிலப் புத்தாண்டு என, ஜன., 1ம் தேதியைக் கொண்டாடுவது, கிறிஸ்துவ மதம் தொடர்பானது என, சொல்வோரும் உண்டு.ஜூயூலிய சீசர் மீண்டும் இந்தக் கொண்டாட்டத்தை, நடைமுறைக்கு கொண்டு வந்தாரே தவிர, அது கிறிஸ்துவ புத்தாண்டு அல்ல. ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகள், தங்கள் சொந்த காலண்டரின்படி உள்ள, ஆண்டு பிறப்பையும், சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்; ஆங்கிலப் பிறப்பையும், உற்சாகமாக வரவேற்கின்றனர்.

புது ஆண்டு பிறப்பது, நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு, கடந்த ஆண்டு தவறுகளை திருத்தி, வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்கு தானே தவிர, வரைமுறை இல்லாமல் கொண்டாடி மகிழ்வற்கு அல்ல. * எப்போதும், நாம் செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையை அமைத்துக் கொள்ளும் தகுதியை, நாம் உருவாக்க வேண்டும். புத்தி இடைவிடாது செயலாற்றும் அளவிற்கு, சுறுசுறுப்பு இருக்க வேண்டும்.
* நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியாகிவிட்டது. யார் கையிலும், தாராளமாய் புரளும் அளவிற்கு பணம் இல்லை என்ற இக்கட்டிலும், நாம் செலவழிக்க அத்தியாவசியமான தேவைகளுக்கு, நம் கையில் கொஞ்சமேனும் கையிருப்பு இருக்க வேண்டும். அதற்கு சேமித்து வைப்பதோடு, சிக்கனமாய் செலவு செய்யவும், வீட்டினரையும் சிக்கனமாய் செலவளிக்க கற்றுக்கொள்ள வைப்பதும், நம் கடமை.
* இப்படி எந்நேரமும் வேலையும், கையிருப்பில் பணமும் இருந்தால், தானாகவே நமக்கு, சொந்த வீடு வாய்க்கப்பெறும். அந்த வீட்டின் ஜன்னலில், சூரியன் தெரியும்படி அமைத்து கொள்ளுங்கள். இது ஏதோ அறிவுரையல்ல... அறிவியல் செய்தி. ஜன்னல் திறந்தால், சூரியனின் ஒளி, வீட்டின் உள்ளே வர வேண்டுமெனில், விசாலமான வீடாய் வாங்கு என்று பொருள். அப்படியே கட்டினாலும், ஜன்னல் திறக்கும் அளவிற்கு இடம் விட்டு கட்டு என அர்த்தம். சூரிய ஒளி வர வேண்டும் என்றால், நீ விரைவாய் எழுந்து, உற்சாகமாய் இருக்கும் ஆரோக்கியத்தில் இருக்க வேண்டும்.
* மழை பெய்தால், அய்யோ நனைகிறோமே என்றில்லாமல், அதை ரசிக்க கற்றுக் கொள்வது அவசியமில்லையா... மழையை ரசிக்கும் மனநிலையும், வானவில்லை துணையோடு கண்டு ரசிக்கும் இணக்கமும், நம் இல்லத்தில் இருக்கும்படியான அன்னியோன்யத்தை, நம் உறவுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.* நமக்கு வேலையிருக்கிறது; அதனால், பணம் வருகிறது. அந்தப் பணத்தில் வீடு கட்டி, சூரியனை ரசிக்கிறோம். நம் வீடு செழிப்பாய் இருக்கிறது; துணையோடு வானவில்லை ரசிக்கிறோம் என்பதோடு, நம்மைச் சுற்றியுள்ள நட்புகளுக்கும், உறவுகளுக்கும் நாம் இணக்கமாய் இருக்கவும், நமக்கென, நம் கைப்பிடித்து ஆதரவளிக்கும் நட்புகளையும், உறவுகளையும் கூட வைத்திருப்பதும் அவசியம்.* நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் மட்டுமின்றி, இந்த ஊரும் நல்லாயிருக்க வேண்டும் அல்லவா... அப்போது, முதலில் நம்மை, நம் ஊரை சுத்தமாய் வைக்க முன்னெடுக்கலாம். குப்பைகளை, நாம் மட்டும் குப்பை தொட்டியில் போட்டால் போதாது; மற்றவர்களையும் வலியுறுத்தலாம். நெகிழி பயன்பாட்டை தவிர்க்க, என்னவெல்லாம் முன்னெடுக்க முடியும் என, யோசிக்கலாம்.
* பிரச்னை இல்லாத வாழ்க்கை, யாருக்கும் சாத்தியமில்லை. 'கடவுளே, என் வாழ்க்கையில் பிரச்னையே வேண்டாம்' என, பிரார்த்திக்காமல், ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் அறிவையும், தீர்க்கும் தன்னம்பிக்கையும் கொடு என, வேண்டுங்கள். ஒன்று இரண்டு பிரச்னை போதாது, ௧௦ பிரச்னைகளை கொடுத்தாலும், அதில் மிக அவசியமான பிரச்னையை, நானே தீர்த்துக் கொள்வேன் என்ற திடத்தை வளர்த்துக் கொள்வோம்.
* நம் அன்றாட வாழ்க்கையே, அவசரகதியில் ஓடுகிறது. நமக்கான உறவுகளையும், சூழல்களையும் கையாளுவதிலும், அவசரம் தேவையில்லையே. நிதானம், பொறுமை என்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தை, இந்த ஆண்டு கண்டுபிடித்து பயன்படுத்துங்கள்.
* எல்லாருமே, எப்போதுமே, எடுத்தவுடனே, 'சாப்ட் ஒர்க்' என்ற கட்டத்திற்கு போக விரும்புவது, மிகவும் ஆபத்து. முதலில், 'ஹார்டு ஒர்க்' என்ற கட்டத்துக்குள் போய் கற்று, கடுமையான உழைப்பைக் கொடுத்த பின், சாப்ட் ஒர்க் என்ற நிலையை அடைவது தான், வெற்றிக்கான படி.
* அளவுக்கு அதிகமாய் ஆங்கிலத்தை மெல்லாமல், நம் தமிழ் வார்த்தைகளில் அழகாய் உரையாடுவோம்.
*தெருவெல்லாம் வண்டிகள் பெருத்துவிட்டது. ஒருத்தரும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது இல்லை என்ற புலம்பலை ஒதுக்கி வைத்து, நாம் முதலில் கடைப்பிடிக்க ஆரம்பிப்போம். நடக்க பழகுவோம்; மிதி வண்டி வாங்குவோம்; மிதிப்போம். சாலையின் விதிகளை மதிப்போம்.
 டைம் இல்லை, ரொம்ப பிஸி, ஓவர் டென்ஷன், அய்ய இதெல்லாம் நமக்கு ஒத்துவராது, நம்ப ஸ்டேட்டசுக்கு இதெல்லாம் வேணாம், புக் படிக்க நேரமேயில்லைன்னு சொல்லிட்டு, 12 மணி நேரம் இணையதளத்தில், தேவை இல்லாதவற்றை பார்ப்பது இப்படியான அலட்டல்களை விட்டுவிடுவோம்.இவ்வளவுதாங்க புத்தாண்டு சபதங்கள். இதில், மொத்த வாழ்க்கையும் அடங்கி விட்டது. ஒருவன் பிறந்தான், வாழ்ந்தான், மறைந்தான் என்றில்லாமல், இப்படியாக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்வது நலம்.நான் ஒருவன், இப்படி சபதங்களாய் எடுத்து, பின்பற்றி கஷ்டப்பட வேண்டுமா... இந்த சமுதாயம் என்ன செய்கிறது... இப்போது என்ன செய்யப் போகிறது போன்ற கேள்விகள், உங்களுக்குள் எழுகிறதா... மிகச் சிறப்பு.இப்படியான கேள்விகள் எழ வேண்டும். ஜனநாயகத் தன்மையும், அதிகாரப் பரவலுமே, ஒரு நவீன சமூகத்தை முன்னோக்கி எடுத்தச் செல்ல முடியும் என்பது உண்மைதான். அதற்கான ஒரு ஆரம்ப விதை தான், தனி மனிதனின் ஒழுக்க விதிகள்.உறுதியான சிமென்ட் தரையையும், மர பெட்டியையும், தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும் குடைந்து, ஓட்டை போடும் எலி.அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால், அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதற்றத்தாலும், பொறியை உடைக்கும் வழியை விட்டு, பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும், பின்னாலும் பதற்றத்துடன் சென்று, சிந்தனை செய்யாமல், மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும்.மனிதனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி... பதட்டமும், மன உளைச்சலும், அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து, முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.நான்கு விஷயங்களை துாக்கிப்போட பழகிக் கொண்டால், பிரச்னைகளும் நம்மைவிட்டு விலகி போக ஆரம்பிக்கும். துக்கம், கவலை, இயலாமை, கஞ்சத்தனம் போன்றவை தான்.தேவைகளைக் குறைத்து, எளிமையாக வாழ்வது தவம். அவசியமற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்தால் போதும். தேவைக்கு மேல் எஞ்சியதை, நலிவுற்ற சகமனிதர்களின் துயர் துடைக்க உதவும் உள்ளம் இருந்தால் போதும்.உறவு முறைகள் தெரியாமல், அவர்களின் அருமையும், வாழ்ந்த வரலாறும் தெரியாமல், இன்றைய இளைய சமுதாயம், நட்புகளும், பழகியவர்களுமே தங்களுக்கு முக்கியமானவர்கள் என, இருப்பதால் தான், பெரும் சிக்கல்கள், சமூகத்தில் எழுகின்றன.பல சமூக சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணங்களே, அன்பு பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், பெரும்பாலான குழந்தைகள் வளர்வதும், முதியோர் இல்லங்கள் அதிகரித்ததும் ஆகும்.இன்று, ஆண்டின் முதல் நாள் கொண்டாட்டம் என்பதை தாண்டி, உலக குடும்ப தினம் என்பதாயும் கொண்டாடுகின்றனர். எவ்வாறு கோள்களின் இயக்கம், அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகுவதில்லையோ, அதுபோல் மனிதனின் வாழ்வு, சமூகத்தை சார்ந்தே அமையும்.அச்சமூகத்துடனான மனிதனுடைய உறவு பலப்பட, பாலமாய் அமைவது அன்பு மட்டுமே. அதற்கு, ஒவ்வொரு மனிதனும், மானுட சமுத்திரத்தில் ஐக்கியமாவதால் மட்டுமே சாத்தியப்படும்.இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை நாம், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், ஏழைகள் என, பகிர்ந்து கொள்ள தீர்மானிக்கலாமே. நம் சந்தோஷம், நம்மளோடு மட்டும் முடிந்துவிட்டால், அதில் எந்த ஒரு திருப்தியும் இல்லை. நம் மகிழ்வு, மற்றவர்களுக்கும் பகிரப்பட வேண்டும்; அதுதான் உண்மையான மகிழ்வு.
உலகமே நட்பு, உறவு, அன்பு, பாசம், கடமை என்ற அடிப்படையில் தான் சுழல்கிறது. அப்படியான அடிப்படையைக் கொண்டு, இந்த ஆண்டை அமைத்துக் கொள்வோம். அதற்கான ஜோசியம் இதோ…

குடும்ப மூத்தவர்கள் வகையில், மாமனார், மாமியார் உங்களை வாழ்த்துவர். சுப நிகழ்ச்சிகளால், குடும்பம் களைகட்டும்; மரியாதை கூடும்.

இடம் பொருள் அறிந்து பேசினால், நீங்கள் தான் வெற்றியாளர். உறவுகளும் உங்கள் கூடவே இருப்பது, உங்களின் பலம்.

மாமனார், மாமியார் உங்களை புரிந்து, செல்வாக்கை கூட்டுவர். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க நேர்ந்தாலும், குடும்பம் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும்.

பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கணவரின் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவரை மாற்றுவீர்கள்; நிறைகளை பாராட்டுவீர்கள்.

பிள்ளைகளுடன், சகோதரர்களுடன் இருந்த பிணக்கு நீங்கும். வீட்டு உபகோயப் பொருட்கள் வாங்கு வீர்கள். உறவுகள் முக்கியம் என்பதை, இந்த ஆண்டு உணர்வீர்கள்.

திருமணம், சீமந்தம் போன்ற சுப காரியங்களால், வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் அமையும். சந்ததிகளுக்காக உழைக்க தயாராவீர்கள்.

மாமனார், மாமியார் வகையில் மகிழ்ச்சி தங்கும். சுப நிகழ்ச்சிகளால், குடும்பம் களைகட்டும். பெரியோரை வணங்குவது, வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

பெற்றோர், பிள்ளைகளை பிரிந்து, வெளி மாநிலத்தில் வேலை செய்யும் நிலை உருவாகும். ஆனாலும், மகிழ்வான உறவுகள் கொண்டவராய் இருப்பீர்கள். உங்களை இயக்குவது, சுற்றமும், நட்பும் தான்.

உறவினர்கள், தோழிகள் மத்தியில், அந்தஸ்து உயரும். குடும்ப உறவுகளுக்கு ஏற்ப, ரசனையை மாற்றிக் கொள்வீர்கள். எல்லாமே உறவுகள் தான் என்பதை, அறிந்து கொள்வீர்கள்.

சுப நிகழ்ச்சிகளால், வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும்; மகனுக்கு நல்ல உத்தியோகம் கிட்டும். உறவுகள் பெருகும்.

பிள்ளைகளால் பெருமை சேரும். புது வீடு கட்டுவீர்கள். குடும்பத்தில் குதுாகலமும், மகிழ்வும் பெருகும்.

உறவுகள் தேடி வரும். மாமியார் அனுசரித்து செல்வார். பிள்ளைகளிடம், தங்கள் சொந்தக் கருத்தை திணிக்க வேண்டாம்; அவரவர் விருப்பப்படி இருப்பதே அழகு.

நாம் நினைத்தால், அனைத்து நாளும் நல்ல நாள் தான். ஒவ்வொரு நொடியும், நல்ல நேரம் தான். பெரியவர்கள், உலக ஞானம் மிக்கவர்கள், மிக நல்ல நாள், மிக மிக நல்ல நேரம் என, சிறப்பிற்கானவற்றை தேர்ந்தெடுத்து, சில விஷயங்களை செய்திருப்பர். அதை ஆராய்ந்து பார்த்தால், பல உண்மைகள் புரியும்; பல நன்மைகளும் இருக்கும். அப்படியான ஒரு நல்ல தொடக்கமாக, இன்று இருக்கட்டும். வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One