உரிமைக்காக போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்ததற்கு குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்திடவேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்தியரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 21 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் பல இடங்களில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. மாணவா்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு துறை அலுவலகங்களில் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு பணிகள் நடைபெறாததால் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவா்களின் உரிமைக்கான போராட்டம். உரிமைக்காக போராடும் பெண்கள் உள்பட 2 ஆயிரம் போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிமைக்காக போராடுபவா்களை கைது செய்வது ஜனநாயக உரிமையை பறிப்பது ஆகும். இது கண்டனத்துக்குரியது. தொடா்ந்து போராடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நியாமான கோரிக்கைகள் மீது அரசு பரிசீலனை செய்யவேண்டும். அவா்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமூக முடிவு காணவேண்டு என கூறியுள்ளார் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ்
நன்றி ஐயா !
ReplyDelete