எம்எல்ஏக்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கலாமா என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, தமிழக அரசின் வருவாயில் 71 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. வருவாயில் அதிகப்படியான நிதியை ஓய்வூதியத்துக்கு செலவு செய்ய வேண்டிய நிலை வந்ததால் இந்தியா முழுவதும் 2003ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறி வருகிறார்.
எம்எல்ஏ-க்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கலாமா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கேள்வி
Sunday, January 27, 2019
எம்எல்ஏக்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கலாமா என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, தமிழக அரசின் வருவாயில் 71 சதவீதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. வருவாயில் அதிகப்படியான நிதியை ஓய்வூதியத்துக்கு செலவு செய்ய வேண்டிய நிலை வந்ததால் இந்தியா முழுவதும் 2003ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment