கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது.
இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இங்கு, தொடக்க வகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லது மேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இரு தலைமையாசிரியர்கள் உள்ளனர்.ஒரே வளாகத்தில் செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இரு தலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாக ரீதியாக, சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்து வகுப்புகளையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவையில், 53 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன.
இங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இது குறித்து விவாதித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என, இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை கல்வித்துறை பின்பற்ற முடிவெடுத்துள்ளது.
அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. இதன் பட்டியலை, வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம். தலைமையாசிரியர்களை கற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான் தெரியவரும்,'' என்றார்
No comments:
Post a Comment