தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 11
பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)
பணி: Administrative Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Personal Clerk - 02
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Typist - 01
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Record Clerk - 01
சம்பளம்: மாதம் ரூ.12,000
பணி: Office Assistant - 04
சம்பளம்: மாதம் ரூ.10,000
வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணினி திறன் பெற்றிருப்பவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் உயர்நிலை பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று Office Automation-ல் பணிபுரியும் திறன் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் அன்று தகுதியானவர்கள் தேவையான தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை அனைத்தையும் எடுத்துக்கொண்டு நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Tamilnadu Skill Development Corporation, Integrated Offices Complex, First Floor, Alandur Road, Guindy, Chennai-600 032.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.01.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்
No comments:
Post a Comment