எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சமூக வலைதளமும் ஜாக்டோ ஜியோவும்

Wednesday, January 30, 2019




ஒரு மிகப் பெரிய ஆயுதம். உண்மையை பொய்யாக்கவும் பொய்யை உண்மையாக்கவும் முடியும். மேலும் ஒரு செயலை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் தங்களின் கருத்தாக கூற முடியும். அது சரியா தவறா என்று ஆராய்வது எல்லாம் மற்றவர் செயல்.. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு
 ஜாக்டோ ஜியோ போராட்டம் பற்றிய பலரின் கருத்து..

எந்த ஒரு துறையை சார்ந்த ஊழியர்களும் அவர்களுக்கென்று தனி அமைப்பை உருவாக்கி அவர்களுடைய உரிமைகளை பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை..

அது போல தான் இந்த போராட்டமும்.. ஆனால் அதை பற்றி எந்த ஒரு புரிதலும்  இல்லாமல் போராட்டம் செய்பவர்கள் மீது தவறாக ஒரு குற்றச்சாட்டை பகிர்ந்து, அதை மற்றவர்கள் நம்பும்படி பரப்புரை செய்வது தான் சமூக வலைதளத்தின் தனித்துவமான திறமை..



அரசு ஊழியர்களே ஒரு அரசை இயக்குகிறார்கள். அவர்களுக்கு அரசே ஊதியம் தரவேண்டும். அதைவிட்டு 'அரசின் பெரும் வருவாய் அரசு ஊழியர்களின் வருமானத்திற்கே செல்கிறது' என்று பழி போடுவது அப்பட்டம்..

பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து போராட்டம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது வெறுமனே சம்பள உயர்வு கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டி பாரம மக்களை அவர்களுக்கு எதிராக திசை திருப்பி அரசு செய்த பெரும் மோசடியை மறைக்கப் பார்கிறது..

அரசு ஊழியர்கள், அரசிடம் பணம் கேட்கவில்லை.. அவர்கள் ஊதியத்தில்  பிடித்தம் செய்த பணம் எங்கே என்பதே அவர்களின் முதல் கேள்வி.. அதை அரசு மாநில கணக்குகளிலும் வைக்காமல் மத்தய அரசிடமும் செலுத்தி வைப்பு வைக்காமல், பணத்தை வேறு வகையில்  செலவு செய்துவிட்டு அவர்கள் மீது வீண் பழி சுமத்தி அனைத்து மக்களையும் ஏமாற்றி திசை திருப்பி நாடகம் ஆடுவது பித்தலாட்டம்.



5000 மேற்பட்ட ஓய்வு பெற்ற பணியாளர்களின் சப்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வைப்பித் தொகை எங்கே.? ஏன் இன்னும் அவர்களுக்கு அவர்கள் பணத்தை தரவில்லை.. எவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேடு..
 அதை கேட்டால், அவர்களுக்கு எதிராக பாமர மக்களை ஏமாற்றி திசை திருப்பிவிடுவதா.? (இதே நிலை தான் போக்குவரத்து ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக..)

இன்னும் எத்தனையோ..

இதை எல்லாம் சிந்திக்காமல் சமூக வலைதளத்தில் காலம்காலமாக பொய்யாக சிலர் பரப்பி வரும் 'ஆசிரியர்கள் வெறும் 75 நாட்களே வேலை, மற்ற நாட்கள் எல்லாம் வடுமுறை தினம்' என்று பகிர்கிறார்கள். இதை யும் நம்புகிறார்கள் சிலர்..
 தமிழக அரசின் அரசாணை படி வருடத்திற்கு பள்ளி நடக்க வேண்டிய நாட்கள் குறைந்த்து 210 நாட்கள்.

இதை கூட பகுத்தாராயமல் கூச்சலிட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டுவதில் என்ன பயன்.



அரசு ஊழியர்களை கேள்வி கேட்கும் பொது மக்களே.. அவர்கள் பணத்தை அவர்கள் கேட்கிறார்கள். அது அவர்கள் உரிமை.. அதை குறை கூறுவதை விட்டுவிட்டு அரசியல்வாதிகளையும், சட்டமன்ற உறிப்பினர்களையும், பாராளுமன்ற ஊழியர்களையும், ஒப்பந்தகார்ர்களையும் கேள்வி கேட்பதே முறை.. ஏனெனில் அவர்கள் கையாள்வது நம்முடைய பணம். அதற்கான முறையான கணக்கை கேட்டிருந்தால், நல்ல  நிலையில் நாம் என்றோ இருந்திருப்போம். இவர்களை கேள்வி கேட்டால் இவர்கள் அடிப்பார்கள்.. அரசு ஊழியர்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், அதனால் அவர்களை தான் கேள்வி கேட்போம் என்பது நம் இயலாமை..

கேள்வி கேட்க வேண்டியவர்களை விட்டுவிட்டு இவர்களை திட்டி குறை கூறுவதால் மக்களே, நம் நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை..

1 comment

  1. அருமையான பதிவு.. .இதை மக்கள் புரிந்து கொண்டால் நல்லது.. .

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One