எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு உடனடி ஊதியம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Wednesday, January 23, 2019




அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கல்வித் துறை, பொதுப்பணித் துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. இது வேதனைக்குரியது. அவர்களது குடும்பங்கள் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே மிகுந்த சிரமப்பட வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய பாக்கியை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். மேலும், மாதம்தோறும் முதல் வாரத்திலேயே ஊதியத்தை அவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One