பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த, 12ம் தேதி முதல், பொங்கல் தொடர் விடுமுறை துவங்கியது; நேற்றுடன் முடிந்தது. ஆறு நாள் விடுமுறையை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களின் பெற்றோருக்கு, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.'இன்று, மாணவர்கள் கட்டாயம் வகுப்புகளுக்கு வர வேண்டும்; விடுமுறை எடுக்க கூடாது' என, அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளியூர் சென்றோர் பலர், இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்து, சனி, ஞாயிறு விடுமுறையிலும், சொந்த ஊரில் இருக்க முடிவு செய்துள்ளனர். அதனால், பள்ளிகளில், மாணவர்களின் வருகை, இன்று குறைவாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது
பள்ளிகள் இன்று திறப்பு மாணவர் வருகை குறைவாகவே இருக்கும்
Friday, January 18, 2019
பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த, 12ம் தேதி முதல், பொங்கல் தொடர் விடுமுறை துவங்கியது; நேற்றுடன் முடிந்தது. ஆறு நாள் விடுமுறையை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களின் பெற்றோருக்கு, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.'இன்று, மாணவர்கள் கட்டாயம் வகுப்புகளுக்கு வர வேண்டும்; விடுமுறை எடுக்க கூடாது' என, அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளியூர் சென்றோர் பலர், இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்து, சனி, ஞாயிறு விடுமுறையிலும், சொந்த ஊரில் இருக்க முடிவு செய்துள்ளனர். அதனால், பள்ளிகளில், மாணவர்களின் வருகை, இன்று குறைவாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment