எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும்: பள்ளிக்கல்வித் துறை திடீர் முடிவு

Monday, January 28, 2019




தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை திடீரென அறிவித்துள்ளது.

ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பழை ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பின்கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்குத் திரும்ப வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. இதேபோன்று மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசு பல முறை வலியுறுத்தியது. இருப்பினும் இந்த அறிவுறுத்தல்களுக்கு ஆசிரியர்கள் செவிசாய்க்கவில்லை.

இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் உடனடியாக இன்று திங்கள்கிழமை பணியில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்தவித, துறை சார்ந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்கள் பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே பணியேற்கலாம். மாறாக அன்றைய தினம் முடிவில் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகக் கருதப்பட்டு, உத்தேச காலிப் பணியிடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பி.எட். பட்டதாரிகள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அரசின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காத ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்ட ஆசிரியர்கள் திரும்பி வருவதற்காக இன்று மாலை வரை காத்திருக்க திட்டமிட்டுள்ளதால், தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நியமனம் இன்று இல்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை முதல் துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One