எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC: இரண்டு தேர்வுகள், ஒரே வினாத்தாள் - அதிர்ச்சி தகவல்கள்

Friday, January 25, 2019




மாஸ் இன்டர்வியூ தேர்வும் ஆர்க்கிடெக்சுரல் assistant தேர்வும் lecturer statistics தேர்வும் ஹார்ட்டிகல்ச்சர் ஆபீஸர் மற்றும் அஸிஸ்டண்ட் டைரக்டர் ஹார்ட்டிகல்ச்சர் தேர்வும் பொதுவாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குறிப்பிட்ட நாட்களில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்று அதற்கான வினா விடைகள் உத்தேசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 தேர்வுகளிலும் இரண்டு ஜோடியாக எடுத்துக் கொள்ளும்போது புள்ளியியல் தேர்வும் தோட்டக்கலை அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் தேர்வு ஒரு உன்னிப்பான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேற்கண்ட இரண்டு தேர்வுகளும் பன்னிரண்டாம் நாள் மற்றும் பதின்மூன்றாம் நாள் ஒன்றாவது மாதம் நடைபெற்றது. மேற்கண்ட இரண்டு தேர்வுகளில் ஹார்ட்டிகல்ச்சர் தேர்விற்கு இணையதளத்தில் கேள்விகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.உதவி இயக்குனர் ஹார்ட்டிகல்ச்சர் பதவிக்கு முதுநிலை தரத்தில் வினாக்கள் அமைக்கப்பட்டன. புள்ளியியல் தேர்விற்கு முதுநிலை தரத்தில் வினாக்கள் அமைக்கப்பட்டன.

இரண்டு தேர்வுகளில் அறிவிக்கைகளை படிக்கும் பொழுது தனித்தனியாக பாடத்திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன மற்றும் இந்த 2 தேர்வும் நடத்தப் பட்ட போது அறிவுத்தாள் 100 வினாக்கள் அடங்கிய கேள்விகள் அமைக்கப்பட்டது.புள்ளியியல் lecturer தேர்விற்கு முதுநிலை தரத்தில் பொதுஅறிவுத் தாளில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் இரண்டிற்கும் அதாவது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மற்றும் புள்ளியில் தொடர்பிற்கான தேர்விற்கும் ஒரே வினாக்கள் அமைக்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு தயார் செய்யப்பட்ட வினாத்தாள்களை வைத்து இரண்டு தேர்வுகளுக்கும் தேர்வை நடத்தி உள்ளார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது. பட்டவர்த்தனமாக தெரிகிறது. அறிவிக்கைகளில் இரண்டிற்கும் ஒரே நாள்தான் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது உண்மை.ஆனால் இரண்டிற்கும் கட்டணம் வெவ்வேறு கட்டணத்தைத்தான் வசூலிக்கிறீர்கள். தனித்தனி அறிவிக்கைகள் அப்புறம் எப்படி ஒரே வினாத்தாளை கொண்டு போட்டித் தேர்வு?.

    ஏற்கனவே பொதுவாக பத்தாம் வகுப்பு தரத்திற்கு உண்டான ஒரு பணியில் அமர்த்தும் போது அதற்கு போட்டித்தேர்வு வைக்க வேண்டும் போட்டித் தேர்வு வைத்து ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பலமுறை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பட்டய மருந்தியல் படித்தவர்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் மற்றும் இன்னும் பல பத்தாம் வகுப்புக்கு மேற்பட்ட பதவி நிலைகள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக கையூட்டு பெற்றுக் கொண்டு பணி நியமனம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்கிடெக்ட் சூழல் assistant மாஸ் இன்டர்வியூ இரண்டிற்கும் தனித்தனி வினாக்கள் தான் அமைக்க வேண்டும். அதுவும் வினாத்தாள் கோடு எண்கள் பட்டவர்த்தனமாக வெளிப்படையாக இரண்டு பேருக்கும் ஒரே வினாத்தாளைக் கொடுக்கிறீர்கள். நான் பலமுறை ஆசிரியர் தேர்வு வாரியத்தை விமர்சனம் செய்து தேர்வு வாரியம் சரியில்லை என்று தேர்வு வாரியத்தின் பணிகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் கொடுத்துவிடுங்கள் நன்றாக தேர்வாணையம் செயல்படுகிறது என்று கூறியிருக்கும் போது நீங்கள் இப்படி செயல்படுவது அவ்வளவு ஆரோக்கியமான போக்கு அல்ல. ஒரு போட்டித் தேர்வர் பல்துறை சார்ந்த கேள்விகளை எதிர் கொண்டால் தான் பலவாறு வருகின்ற பிரச்சினைகளை அவர் தீர்த்து தன்னுடைய நேர்மையான பணியை நிலைநாட்ட முடியும்.


அதிலும் முதுநிலை தரத்தில் பொது அறிவுத்தாள் புள்ளியில் தேர்வுக்கு நடந்த பாடத்திற்கு இருந்திருக்க வேண்டும் ஆனால் தோட்டக்கலை அலுவலர்கள் அவர்களுக்கு நடத்தப்பட்ட இளநிலை தரம் என்றவாறுதான் பொது அறிவுத்தாள் இருந்தது. அதாவது இணையதளத்தில் கொடுக்கப்பட்ட முதுநிலை தரத்தில்  புள்ளியியல் தேர்வு இணையதளத்தில் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டவாறு முதுநிலை தரத்தில் கேட்கப்படவேண்டிய புள்ளியியல் தேர்விற்கான பொது அறிவு தாளையும் விளைநிலத்தில் கேட்கப்படவேண்டிய தோட்டக்கலை துணை இயக்குனர் பதவிக்கான பட்டப்படிப்பு தர வினாத்தாள் ஒரு சேர சேர்த்து தேர்வுஎழுதினார்கள். இது அவர்களுக்கு எளிமை என்று கூறினாலும் கூட கொடுக்கப்பட்ட அறிவிக்கையில் அவ்வாறு பாடத்திட்டம் ஒரே மாதிரியாக கொடுக்கப்படவில்லை தொடர்புடைய அறிவிக்கையில் என்பது இங்கு மிகவும் வருந்தத் தக்கது ஆகும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One