பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட புதிய வினாத்தாள் முறையை மாணவர்களுக்கு வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான மொழிப்பாடங்கள், பொதுப் பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ஆகிய அனைத்துப் பாடங்களுக்குமான வினாத் தாள் வடிவமைப்பு தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், வினாத்தாள் வடிவமைப்பை தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவற்றை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பை பொதுமக்களும் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment