எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.02.19

Monday, February 11, 2019


பிப்ரவரி 11

கண்டுபிடிப்பாளர், அறிவியலாளர், விஞ்ஞானி, தொழிலதிபர், 1093 கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர், தனது மின்விளக்கு கண்டுபிடிப்பின் மூலம் உலகிற்கே ஒளியை வழங்கிய தாமஸ் ஆல்வா எடிசன்  அவர்களின் பிறந்தநாள்.

திருக்குறள்

அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள்:157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

விளக்கம்:

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

பழமொழி

A fog cannot be dispelled with a fan

சூரியனை வெறுங்கையால் மறைக்க முடியாது

இரண்டொழுக்க பண்புகள்

1. தமிழர் பண்பாடு என்பது மிக பழமையானது, ஆழமானது மேலும் உலக அளவில் போற்றப் படுகிறது எனவே இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்
2. நான் மாண்புமிகு மாணவன் எனவே எனது மனதை தீய நினைவுகள் இன்றி தூய்மையாகவும் செயல்களை சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.

பொன்மொழி

புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது.

  - டாக்டர். ராதாகிருஷ்ணன்

 பொது அறிவு

1.இந்தியாவின் மிக உயரமான கொடிக்கம்பம்  எங்கு உள்ளது?

 பெலகாவி( கர்நாடகம்)

2. ஆசியாவின் மிகப்பெரிய அல்லிப்பூ பூந்தோட்டம் எங்கு உள்ளது?

 ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

தேங்காய் பால்




1. தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.

2. எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. இந்த பாஸ்பரஸ் உடலில் இருக்கும்
அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது.

3. தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் உடலை சுலபத்தில் தொற்றி தாக்கக்கூடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

English words and Meaning

Visor.    முகமூடிம
Vital.   முக்கியமான
Virtue.   ,நேர்மை நற்குணம்,ஒழுக்கம்
Vigour. சுறுசுறுப்பு
Vigil.     காவல், கண்விழிப்பு

அறிவியல் விந்தைகள்

எதிரொளிப்பு
*எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு அல்லது ஒளித்திருப்பம் (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்
*இது ஒழுங்கான எதிரொளிப்பு, ஒழுங்கற்ற எதிரொளிப்பு, பன்முக எதிரொளிப்பு மற்றும் முழுஅக எதிரொளிப்பு என பல வகைப்படும்
* வைரத்தின் ஜொலிப்பிற்கு முழு அக எதிரொளிப்பு காரணம் ஆகும்.

Some important  abbreviations for students

* DST    -   Daylight Saving Time

* DDT  -Dichloro-Diphenyl Trichloro-ethane (disinfectant)

நீதிக்கதை

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One