2 வயதிலேயே 40 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் கண்டு மதுரையை சேர்ந்த காவ்யா ஶ்ரீ எனும் சிறுமி உலக சாதனைப் படைத்து Will Medal of World record-ஐ வாங்கி உள்ளார்.
மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் - திவ்யா தம்பதியின் 2 வயது குழந்தை காவ்யாஸ்ரீ. இக்குழந்தையின் பெற்றோர், இந்தியா உள்பட 40 நாடுகளின் தேசிய கொடிகளையும், நாட்டின் பெயரையும் கற்றுக்கொடுத்தனர். அவற்றை அழகாக புரிந்துக் கொண்டு அதனை மீண்டும் அவளாகவே கூறியுள்ளார்.
காவ்யாஶ்ரீ கொடிகளை அடையாளம் காணும் வீடியோ அவளது பெற்றோர் உலக சாதனை குழுவிற்கு அனுப்பி உள்ளனர். இதனையடுத்து அக்குழந்தைக்கு WILL MEDAL OF WORLD RECORD என்ற அமைப்பு விருது வழங்கி பாராட்டியது. அக்குழந்தையின் பெற்றோரையும், அக்குழந்தையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்
No comments:
Post a Comment