எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

32 அரசுப்பள்ளி மாணவர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா

Saturday, February 16, 2019




மாநகராட்சி பள்ளிகளில் படித்த, 32 மாணவ - மாணவியர், கல்வி சுற்றுலாவிற்கு, சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.

சென்னை மாநகராட்சி, கல்வித் துறை, சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் மற்றும் சிறப்பு தொழிற்பயிற்சிக்கான அறக்கட்டளை அமைப்பு இணைந்து, 'விங்ஸ் டூ பிளை' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.இதன் வாயிலாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களின், அறிவு திறனை வளர்க்கும் வகையில், போட்டி நடத்தப்படுகின்றன. இதில், வெற்றி பெறும் மாணவர்களை, கல்வி சுற்றுலாவிற்காக, அயல்நாட்டிற்கு அழைத்து செல்வர்.

இந்தாண்டுக்கான அறிவியல் போட்டிகளில், 7,000 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 280 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.இவர்களில், அறிவியல் சார்ந்த மாதிரி படைப்புகளை உருவாக்கி, சிறப்பாகவும், தெளிவாகவும் விளக்கியவர்களில், 32 மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்றி மாணவர்களுக்கு, ஷெனாய் நகர், அம்மா மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், கமிஷனர் கார்த்திகேயன், பாராட்டு சான்றிழ்களை, நேற்று வழங்கினார்.இவர்கள் அனைவரும், கல்வி சுற்றுலாவாக, சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

ரூ.10 லட்சம் நிதி!

மாநகராட்சியின், இரண்டு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியரின் உணவு மற்றும் கல்வி பயன்பாட்டிற்காக, 10 லட்சம் ரூபாயை, சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் மற்றும் சிறப்பு தொழிற்பயிற்சிக்கான அறக்கட்டளை இணைந்து, கமிஷனர், கார்த்திகேயனிடம் நேற்று வழங்கின.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One