''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, அமைச்சரவை கூடி முடிவு செய்யும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: முத்துராமலிங்க தேவர் வரலாற்றை, ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதாகவும், அதில், 'முத்துராமலிங்கம்' என, குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்: இது, தவறான செய்தி. அதுபோன்று புத்தகம் வெளியிடப்படவில்லை. அவ்வாறு புத்தகம் வெளியிடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிமுன் அன்சாரி: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த, ஏழு மீனவர்கள், நம் எல்லையில் மீன்பிடித்த போது, இலங்கை கடற்படையினர், கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் ஜெயகுமார்: வெளியுறவு அமைச்சகத்திடம் பேசி, அவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுத்துஉள்ளோம். இலங்கை சிறையில், 20 மீனவர்கள் உள்ளனர். அனைவரையும் விடுவிக்க, முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில், 587 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.தமிமுன் அன்சாரி: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு வர உள்ளதாக தகவல். அவ்வாறு நடத்தப்பட்டால், கிராம மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.அமைச்சர் செங்கோட்டையன்: இது தொடர்பாக, மாநில அரசே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு, எந்த முடிவும் எடுக்கவில்லை.தி.மு.க., - தங்கம் தென்னரசு: எதிர்காலத்தில், அரசின் முடிவு என்ன?அமைச்சர் செங்கோட்டையன்: முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆலோசித்து, அமைச்சரவை கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும். இப்போது சொல்ல முடியாது.இவ்வாறு, விவாதம் நடந்தது
No comments:
Post a Comment