எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

56 பேருக்கு தமிழ் புத்தாண்டு விருது

Tuesday, February 19, 2019




தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2018ம் ஆண்டுக்கான, தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறும், 56 பேரின் பெயர்கள், நேற்று அறிவிக்கப்பட்டன.தமிழுக்கும், தமிழியல் ஆய்வுக்கும், தொடர்ந்து தொண்டாற்றி வருகிற, தமிழ் அறிஞர், கவிஞர், எழுத்தாளர், நற்றமிழ் நாவலர், ஆராய்ச்சியாளர், அயல்நாடுகளில் தமிழ் வளர்க்கும் சான்றோர்களுக்கு, தமிழக அரசு சார்பில், விருது வழங்கப்படுகிறது.பாராட்டு கேடயம்தற்போது, மறைமலை அடிகள் பெயரிலும், அயோத்தியதாச பண்டிதர் பெயரிலும், புதிய விருதுகளை, முதல்வர் அறிவித்து உள்ளார்.இவை தவிர்த்து, 2018ம் ஆண்டுக்கான, தமிழ் புத்தாண்டு விருது பெறும், 56 பேரின் பெயரை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று அறிவித்தார்.அதன்படி, ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் தமிழ் சங்கத்திற்கு, தமிழ்த்தாய் விருது வழங்கப்படுகிறது. மேலும், புலவர் காசுமான் - கபிலர் விருது; காசிநாதன் - உ.வே.சா., விருது; முனைவர் முருகேசன் - கம்பர் விருது; அ.தி.மு.க., பேச்சாளர், குமார் - சொல்லின் செல்வர் விருது; சந்திரசேகரன் நாயர் - ஜி.யு.போப் விருது; பேராசிரியர் நசீமா பானு - உமறுப்புலவர் விருது; சிலம்பொலி செல்லப்பன்.இளங்கோவடிகள் விருது; முனைவர் உலகநாயகி - அம்மா இலக்கிய விருது; பா.வீரமணி - சிங்காரவேலர் விருது வழங்கப்பட உள்ளன.கடந்த, 2017ம் ஆண்டிற்கான, முதல்வரின் கணினி தமிழ் விருது, மதன் கார்க்கிக்கு வழங்கப்பட உள்ளது.தமிழ்த்தாய் விருது பெறும், புவனேஸ்வர் தமிழ் சங்கத்திற்கு, 5 லட்சம் ரூபாய் விருது தொகையுடன், பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.மற்ற விருதுகள் பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய், விருது தொகையும், 1 சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.25 ஆயிரம் ரூபாய்கடந்த ஆண்டிற்கான, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள், யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, சீனிவாசன், குப்புசாமி, அக்பர் கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செந்தில்குமார், பழனி, அரங்கசாமி, சங்கரநாராயணன், நிலா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.தலா, 1 லட்சம் ரூபாய் விருது தொகை, தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.அதேபோல், உலகத் தமிழ் சங்க விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜீவகுமாரனுக்கு, இலக்கிய விருது; பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரதிதாசனுக்கு, இலக்கண விருது; சச்சிதானந்தத்திற்கு, மொழியியல் விருதும் வழங்கப்பட உள்ளன.அத்துடன், தமிழ் பணியாற்றி வரும் தமிழறிஞர்களில், மாவட்டத்தில் ஒருவருக்கு என, 32 பேருக்கு, 'தமிழ் செம்மல் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது பெறுவோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் விருது தொகைஉடன், தகுதியுரை வழங்கி, பொன்னாடை வழங்கப்படும்.இவ்விருதுகளை, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., இன்று வழங்க உள்ளார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One