வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 585 ஆசிரியர்களை அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் இரா. வனஜா சனிக்கிழமை உத்தரவிட்டார்.
ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதுக்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 90 பேர் உள்பட மொத்தம் 92 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கல்வித் துறையைச் சேர்ந்த 90 ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்து கல்வித் துறை உத்தரவிட்டதுடன், அவர்களது பணியிடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டன. இதுதவிர, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு, 17 பி குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உயர் அலுவலர்களின் உத்தரவுக்குக் கீழ் படியாததாகக் கூறி, 3 வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், மொத்தம் 585 ஆசிரியர்களை அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. வனஜா சனிக்கிழமை உத்தரவிட்டார். ஜன. 30 ஆம் தேதி பணிக்கு வராதவர்கள் இடமாற்றம் செய்யப்படுவர் என்ற உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்
No comments:
Post a Comment