எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து கேட்கப்படும்

Tuesday, February 19, 2019




ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து கேட்கப்படும்,'' என, அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற அவர் கூறியதாவது:மத்திய அரசின் அரசாணைப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்துவது குறித்து, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும். அதன்பின், அமைச்சரவை கூடி, உரிய முடிவு எடுக்கும்.அரசு ஊழியர்களின் பிள்ளைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், உரிய ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டுக்கான, புதிய பாட புத்தகங்கள் இன்னும், 20 நாட்களில் முழுமையாக தயாராகும்.சிறப்பு ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது; உரிய உத்தரவு வந்தவுடன், பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One