வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய வங்கியால் வணிக வங்கிகளுக்குப் பணம் தேவைப்படும் போது கடன் அளிக்கக் கூடிய வட்டி விகிதம் ஆகும். மக்களுக்குப் பணம் தேவைப்படும் போது வங்கிகளிடம் கடன் பெறுவது போன்று , வங்கிகளுக்குக் கடன் தேவைப்படும் போது மத்திய வங்கியை அணுகுவார்கள். அது மட்டும் இல்லாமல் மத்திய வங்கிக்குக் கடன் தேவைப்பட்டாலும் சில வணிக வங்கிகள் கடன் அளிக்கும். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படும்.
6வது நாணய கொள்கை கூட்டம் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. நடப்பு நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என இரண்டு முறை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment