அனைத்து பள்ளிகளிலும், இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வழியாக, 1 முதல், 19 வயதுக்கு உட்பட்ட, அனைத்து குழந்தைகளுக்கும், தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை, இன்று வழங்கப்படுகிறது. இதற்கு, அனைத்து பள்ளிகளிலும் உரிய ஏற்பாடுகள் செய்து, மாணவர்களுக்கு மருந்து வழங்க வேண்டும்.விடுபட்டோருக்கு, பிப்., 14ல், மாத்திரை வழங்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள், இந்த பணியில் ஆர்வம் காட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment