ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஜன., 22ம் தேதிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கின. பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. எனினும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஜனவரி 29ம் தேதியன்று தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்ப வெளியானது. அதில் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசியர்களின் பணிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவித்து அதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என கூறப்பட்டது. மேலும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் என்றும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஜனவரி 29ம் தேதி பெரும்பாலான பகுதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களில் 99 சதவிகிதத்தினர் பணிக்கு திரும்பியதாகவும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியானது.
இதனையடுத்து தொடக்க கல்வித்துறையில் 535 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை 577ஆக உயர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் 609 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது இரு துறைகளிலும் சேர்த்து 1186 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையனுடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சந்திந்துள்ளனர். தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், பிடித்தம் செய்த சம்பளத்தை தர வேண்டும், இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment