'புதுமை பள்ளி' விருதுடன், 1 லட்சம் ரூபாய் பரிசு பெற, அரசு பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி, புதுமையான கற்பித்தல் முறையை கையாண்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திய அரசு பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும், 'புதுமை பள்ளி' விருது வழங்கப்படுகிறது.மாவட்ட அளவில், ஒரு துவக்கப் பள்ளி, ஒரு நடுநிலை மற்றும் ஒரு மேல்நிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அதில் இருந்து ஒரு பள்ளி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படும். வெற்றி பெறும் பள்ளிக்கு, விருதுடன், பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.இதன்படி, மாவட்ட அளவிலான பள்ளிகளை தேர்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மூத்த தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 'தகுதியுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுமை பள்ளி விருது விண்ணப்பிக்க அழைப்பு
Monday, February 18, 2019

Subscribe to:
Post Comments (Atom)
WHEN AND WHERE WE WILL ABLE TO GET THE APPLICATION FORM?
ReplyDelete