எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப் பள்ளிகள் தரம் குறைவதற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம்; அரசின் தவறான பிரச்சாரத்தால் பின்னடைவை சந்தித்தோம் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் விளக்கம்

Friday, February 1, 2019




எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசிரியர்களின் போராட்டத்துக்கு இப்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
தகுதிக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது, அரசுப் பள்ளிகள் தரமாக இல்லாததற்கு ஆசிரியர்களே காரணம் என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆசிரியர்கள் மீது வைக்கப்பட்டன.



 இதுதொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

அ.மாயவன் (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்):

அரசுப் பள்ளிகள் தரம் குறைவதற்கு அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் சரியாக நிரப்பப்படுவதில்லை. போதுமான ஆய்வக வசதிகள்இல்லை. கழிப்பறை உட்பட அடிப்படை கட்டமைப்புவசதிகள்கூட பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. இப்படி பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில்தான் ஆசிரியர்கள் தங்கள் பணியை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.அதேநேரம் முன்பைவிட இப்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது. ஆங்கில மொழியின் மீதான மோகத்தால்தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்க்கின்றனர். எனவே, எல்லா வகை பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக்கி, ஆங்கிலமும் சிறப்பாக கற்றுதரப்படும் என ஆட்சியாளர்கள் அறிவிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மேலும் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்காமல் இருந்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.இந்த போராட்டம் ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்காகவே என்பதுபோன்ற தவறான தோற்றமும் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. எந்த ஒரு அரசும் ஊழியர்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்கு அதிகமாக சம்பளம் வழங்கத்தயாராக இருக்காது. அதில் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. மத்தியஅரசுநிர்ணயித்ததைவிட குறைந்த ஊதியத்தைத்தான் பெற்று வருகிறோம். போராட்டம் என்பதே அன்றாட வாழ்க்கைக்கு இடைஞ்சல் செய்வதற்குத்தான் என்பது போன்ற ஒரு கண்ணோட்டமும் இன்று பொதுமக்கள் மத்தியில் உருவாக்கப்படுகிறது. அதனால் எந்தவொரு போராட்டத்துக்கும் பொதுமக்கள் ஆதரவு கிடைப்பது குறைந்து வருகிறது.இந்த போராட்டத்தின் மூலம் ஒற்றுமையை மேலும்பலப்படுத்த வேண்டும் என்ற படிப்பினையை பெற்றுள்ளோம். அது உடனடியாக நடக்கத்தான் போகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதானநடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் எங்கள் ஒற்றுமை ஓங்கி ஒலிக்கும்.

இரா.தாஸ் (பொதுச்செயலாளர் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி):

அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக உள்ளதாக கூறுவது தவறான வாதம். இங்கு பொருளாதாரம் மற்றும்சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்கள்தான் அதிகம் படிக்கின்றனர். குடும்பச்சூழல் உட்பட பல்வேறு இன்னல்களுக்கு இடையேதான் அந்த குழந்தைகள் படிக்க வேண்டியுள்ளது. அதில் 20 சதவீத மாணவர்கள் நெறி பிறழ்ந்தவர்களாக இருக்கின்றனர். முதலில் அவர்களை மனரீதியாக நல்நிலைக்கு கொண்டுவந்த பின்னர்தான் பாடங்களை போதிக்க வேண்டும். பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஈராசிரியர்களே உள்ளனர்.மாணவர் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் 28 பாடங்களை நடத்த வேண்டும். இதுதவிர 53 வகையான ஆவணங்கள் அரசு சார்ந்த இதர பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது. இவ்வளவு பணிச்சுமையையும் தாண்டித்தான் பாடம் எடுக்க வேண்டும். அந்தந்த கிராமங்களின் அரசியல் பின்புலத்தில் இருப்பவர்களின் மறைமுக நெருக்கடியையும் சமாளிக்க வேண்டும்.தனியார் நிறுவனங்கள் மலைப்பகுதிகளில் பள்ளிகளை தொடங்கி சேவை செய்யமாட்டார்கள். அரசுதான் செய்ய வேண்டும்.ஆசிரியர்களின் தகுதிக்கு அதிகமாக சம்பளம் தரப்படுகிறது என்ற பார்வையும் சரியானதல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர்இருந்த விலைவாசியும் இப்போதுள்ள விலைவாசியும் ஒன்றாகவா இருக்கி றது? தொழிலாளர் சட்டப்படிஒரு ஆசிரியருக்கு அவரின் குடும்பத்தையும் கணக்கில் கொண்டுதான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. எங்கள் பணிக் குரிய ஊதியத்தைத்தான் பல்வேறு போராட்டங்களின் மூலம் கேட்டுப் பெற்றுள்ளோம். புதிதாக இடைநிலை ஆசிரியர் பணியில் சேருபவர்களுக்கு கையில் ரூ.15,000 ஆயிரம்தான் கிடைக்கிறது. உயர் படிப்புடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்களுக்கு மட்டுமே ரூ.80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.இணைப்பு என்ற பெயரில் தொடக்கப் பள்ளிகளை அரசு மூடி வருகிறது. அரசாணை 56-ன் மூலம் வேலை வாய்ப்புகளை அழித்து ஒழிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இதை எதிர்த்தே போராடினோம். ஆனால், சம்பள உயர்வுக்குத்தான் போராடுவதாக ஆட்சியாளர்கள் தவறான பிரச்சாரம் செய்தனர். அதை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை.

மோசஸ் (முன்னாள் தலைவர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி):

அரசு செய்த அளவுக்கான எதிர்ப்புப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் அதே பலத்தோடு எங்கள்நியாயமான கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம். அதனால்தான், எங்களை வருத்தமடையச் செய்யும் வகையில் சில விமர்சனங்கள் ஆங்காங்கே எழுகின்றன. தற்காலிகமாகத்தான் போராட் டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் இப்போதைய படிப்பினைகளுடன் முழுமூச்சில் தயா ராகி அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One