புதுக்கோட்டை,பிப்.25:புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிக் கலைத்திருவிழா,கூடுதல் வகுப்பறை கட்டிட ஆணை வழங்கும் விழா,மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார அறை கட்ட ஆணை வழங்கும் விழா முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் கலைத்திருவிழா கலையருவிப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுமற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியும், கூடுதல் வகுப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை கட்டுவதற்கான ஆணை வழங்கியும் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரியில் ரூ 100 கோடி செலவில் அனைத்து விதமான சிறுநீரக பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.. புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரியில் நாளை மறுதினம் புதன்கிழமை கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ கண்காட்சி நடைபெற உள்ளது.இக்கண்காட்சியானது பத்து நாட்கள் நடைபெறும்..
இக்கண்காட்சியினை மருத்துவ கல்லூரி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது..இக்கண்காட்சியானது மாணவர்கள் மனதில் டாக்டராக,பல்டாக்டராக வர வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கண்காட்சியை அரசுப்பள்ளி,தனியார் பள்ளி,தனியார் கல்லூரி மாணவர்கள் கண்டு பயன் பெற வேண்டும்.இக்கண்காட்சியில் தாயின் கருவறையில் இருந்து குழந்தை பிறப்பது பற்றியும்,விபத்து நடந்தால் காப்பாற்றுவது குறித்தும் 26 துறைகளின் சார்பில் விளக்கம் அளிப்பார்கள். நமது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்.அது போல நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.அனைத்து தலைமையாசிரியர்களும் கிராமத்தினர் போற்றும் வகையில் கிராமத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.மாணவர்களும் சிறப்பாக கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும்.பள்ளிக்கல்வித் துறைக்கு அம்மாவின் அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.எனவே இங்கு வந்துள்ள தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி மூலமாக 2018- 19 ஆம் கல்வி ஆண்டில் 16 பள்ளிகளில் 20 அலகுகள் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்ட ரூ.194.00 இலட்சத்திற்கான ஆணைகளையும்,160 பள்ளிகளில் 200 அலகுகள் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான கழிப்பறைகள் கட்ட ரூ.204.00 இலட்சத்திற்கான ஆணைகள் என மொத்தம் 176 பள்ளிகளுக்கு ரூ.398.00 இலட்சம் (மூன் று கோடியே தொண்ணூற்று எட்டு இலட்சம் மட்டும்) மதிப்பிலான கட்டுமானப் பணிகளுக்குரிய நிர்வாக அனுமதி ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் பள்ளிக்கலையருவித் திருவிழாவில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.முன்னதாக நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களின் கலைத்திறமையை பாராட்டி தனது சொந்த பணத்தை ரூ 5000,2000,1000 என தனித்தனியாக வழங்கிப் பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ராஜநாயகம், இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.அமுதாராணி உதவித்திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,மற்றும் கவரப்பட்டி தலைமையாசிரியர் இரா.சிவக்குமார்,பெருங்களூர் தலைமையாசிரியர் ராஜ்குமார் உள்ளிட்ட பல தலைமையாசிரியர்கள், பள்ளிமேலாண்மைக்குழுத்தலைவர்கள், உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.அண்ணாமலை ரஞ்சன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment