பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள், அரசு கருவூல ஊழியர்கள், காவல் துறையின் அமைச்சு பணியாளர்கள் என அனைத்து அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத இறுதியில் நடந்த தொடர் போராட்டத்தால், அரசு பணிகள் அனைத்தும் முடங்கியது. இதனால், அரசு துறையில் உள்ள கோப்புகள் அனைத்தும் மற்ற அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் முடங்கியது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுக்கும் கருவூலப் பணிகள் அனைத்தும் முடங்கியது. அதேபோல் தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் வருகைப்பதிவேடு குறிப்புகள் பதிவு செய்து அமைச்சு பணியாளர்கள் அரசு கருவூல அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் அனுப்பவில்லை.
இதனால், தமிழகம் முழுவதும் காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் ஜனவரி மாத ஊதியம் வரவில்லை. வழக்கமாக காவல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 31ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட்டு விடும். ஆனால் காவல் துறையில் ஒரு சிலருக்கு மட்டும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 80 விழுக்காடு பேருக்கு ேநற்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, மாத ஊதியத்தில் குடும்பம் நடத்தும் போலீசார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment