ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற காளையார்கோவில் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டம் நடத்தியதால், மாறுதல் ரத்து செய்யப்பட்டது.புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் பஸ் மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது. முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஜன.,31 ல் பணிக்கு திரும்பினர். பள்ளி கல்வி இயக்குனர் போராட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். காளையார்கோவில் ஒன்றிய ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்க தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் சென்றனர். இதை அறிந்த கிராமத்தினர் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது என உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்ததால் மாறுதலை ரத்து செய்தனர்.மாவட்ட கல்வி அலுவலர் கூறியதாவது: காளையார்கோவில் ஒன்றியத்தில் 292 ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்ய அரசு முதலில் உத்தரவிட்டது. உத்தரவை வழங்க சென்றோம். பெற்றோர் எதிர்ப்பால் பள்ளி கல்வி இயக்குனர் ஆசிரியர் இடமாறுதலுக்கு தடை விதித்துவிட்டார், என்றார்.
ஆசிரியர் இடமாறுதலுக்கு எதிர்ப்பு உத்தரவை ரத்து செய்த இயக்குனர்?
Sunday, February 3, 2019

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment