எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேர்வு பயம் போக்க உளவியல் ஆலோசனை

Thursday, February 28, 2019




பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, '104' மருத்துவ உதவி மையத்தில், உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், '104' என்ற மருத்துவ உதவி சேவை மையம் செயல்படுகிறது. இந்த சேவை வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மார்ச், 1 முதல் உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.மாணவர்கள், '104' என்ற எண்ணை அழைத்தால், பதற்றம், மன அழுத்தத்தை போக்குதல், எண்ணச் சிதறல்களை தவிர்த்தல், நினைவாற்றலை பெருக்குவது, உணவு முறைகள் மற்றும் உறங்கும் முறைகள் குறித்தும், ஆலோசனை வழங்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதற்காக, உளவியல் ஆலோசகர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய குழு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறது. இந்த சேவை, மார்ச் முதல் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One