'பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் மீதான இடமாற்ற நடவடிக்கையை கைவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கை
களை வலியுறுத்தி, போராட்டங்கள் நடந்தன.
இவற்றில் பங்கேற்ற, பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் மீதான, பணியிடமாற்ற நடவடிக்கை, இன்னும் ரத்து செய்யப்படவில்லை. இதனால், அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்
கோரிக்கைகள் நியாயமானவை; நிதி பற்றாக்
குறையால் நிறைவேற்ற முடியவில்லை என, அரசு ஒப்புக் கொண்டது. இத்தகைய, நியாயமான
காரணங்களுக்காக போராடியவர்களை தண்டிக்கத் தேவையில்லை.
பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய, தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment