ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல்பட்டு
ஜவ்வாதுமலை, ஆலங்காயம் ஒன்றியம், வேலூர் மாவட்டம்.
ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லிவாசல் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மேல்பட்டு – பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நேற்று 26.02.2019 செவ்வாய்க்கிழமை வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக கல்விச்சீராக பள்ளிக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்பு வரையிலான பொருட்கள் திரட்டப்பட்டு பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இக்கல்விச்சீர் வழங்கும் விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.R.நெடுஞ்செழியன்,BEO., அவர்களும், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் திரு.P.வெங்கடேசன்,BRTE., அவர்களும் கலந்துக்கொண்டு கல்விச்சீர் வழங்கிய அனைவரையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினர். மேலும் பள்ளி வளர்ச்சியில் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு குறித்து பாராட்டினர்.
No comments:
Post a Comment