எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்காமலும் , ஊதிய மாற்றமும் செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

Tuesday, February 26, 2019


அங்கன்வாடியில் இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்துவதை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.


இன்றைய விசாரணைக்கு பின் ...

அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் எந்த பாதிப்பு இருக்கக்கூடாது என்றும்.

இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எந்த மாற்றம் செய்யக்கூடாது என்றும் அரசுக்கு நீதிபதி  வழிக் காட்டல் நெறிமுறையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இது தீர்ப்பு நமக்கு வெற்றி அல்ல.
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் பணி அமர்த்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பதே
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒருமித்த முடிவு .

ஆகையால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேல் முறையீடு செய்து, இறுதி
 வெற்றி பெறுவோம்.
 வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும்.

ஆசிரியர்கள் எந்த வித கலக்கமும் அடைய வேண்டாம்.


இவண்
க.மீனாட்சி சுந்தரம் Ex.mlc
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One