வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின், கூகுள்+ சேவை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4 முதல் கூகுள் பிளஸ் தளத்தில் பயனாளர்கள் பதிவிடுவது நிறுத்தப்படுகின்றது.
கூகுள் பிளஸ் சேவை நிறுத்துவதற்கு முன்பாக படங்கள் மற்றும் முக்கிய தரவுகளை டவுன்லோட் செய்து கொள்ள கூகுள் அனுமதி வழங்கியுள்ளது.. குறிப்பாக கூகுள் பிளசில் தரவேற்றப்பட்ட படங்கள் மற்றும் தகவல்கள் மட்டும் நீக்கப்பட உள்ளது. ஆனால் கூகுள் போட்டோஸ் தளத்தில் உள்ளவை நீக்கப்படாது.
கடந்த அக்டோபரில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பயனர் விபரங்கள் இந்த தளத்தின் பாதுகாப்பு சார்ந்த குளறுபடிகளால் திருடப்பட்டது உறுதியான நிலையில், அந்த தளத்தை நீக்க கூகுள் அறிவித்தது.
பிப்ரவரி 4 முதல் கூகுள் ப்ளசில் புதிய பயனர்கள் சேர, பயனாளர்கள் பதிவிடும் வசதி நிறுத்தப்படுவதுடன், இந்த தளத்தின் மூலம் பல்வேறு தளங்களில் உள்நுழைகின்ற ஆப்ஷன் வழங்கப்பட்ட முறை நிறுத்தப்படுகின்றது. ஆனால் இந்த தொடர்பு Google sign-in என மாற்றப்பட உள்ளது.
மற்ற தளங்களில் செயல்பட்டு வரும் கூகுள் பிளஸ் கமென்ட் பாக்ஸ் முறை மார்ச் 7 முதல் நிறுத்தப்பட உள்ளது. ஜி சூட் எனப்படுகின்ற தொழில்முறை சார்ந்த சேவை தொடர்ந்து ஜி பிளஸ் கனக்கில் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளது.
உங்கள் கூகுள் பிளஸ் டேட்டா.
No comments:
Post a Comment