ஆசிரியர்கள் வருகைப் பதிவை தலைமை ஆசிரியர் அல்லது செயல் தலைமை ஆசிரியர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் வருகையை, சம்மந்தப் பட்ட வகுப்பாசிரியர்கள் APP மூலம் பதிவு செய்ய வேண்டும். மாணவர் வருகையை ஒரு முறை பதிவு செய்து விட்டால், மீண்டும் மாற்ற முடியாது.
கால தாமதமாக வரும் மாணவர்களுக்கு, பிற்பகல் மட்டுமே மாணவர் வருகையை பதிவு செய்ய முடியும்.
ஆசிரியர்கள் வருகையை தலைமை ஆசிரியர் தான் APP மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் இடம், நேரம் இவை Longitude and Latitude மூலம் பதிவாகுமென்பதால், தலைமை ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கே பள்ளியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் 9.10 க்குள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கு வராத / கால தாமதமாக வரும் ஆசிரியருக்கு, தலைமை ஆசிரியர் present எனப் பதிவு செய்து, ஏதேனும் பிரச்சனை என்றால் தலைமை ஆசிரியருக்கு மட்டுமே மெமோ வரும்.
அவரவர் வகுப்புக்கு அவரவர் கைபேசியிலிருந்து தான் மாணவர் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்பதால், எவ்வித adjustment செய்ய முடியாது.
வாகன பழுது, போக்குவரத்து நெரிசல், பஸ் வரல அல்லது லேட் என காரணம் சொல்ல முடியாது.
தகவல் பகிர்வு:
திரு.லாரன்ஸ்
No comments:
Post a Comment