மக்களவை மற்றும் இடைத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணையைப் பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 18ம் தேதி வியாழக்கிழமையன்று தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment