மத்திய அரசின் அறிவிப்பு
2019-20ஆம் ஆண்டுக்கான 10 மாத மொழியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*பயிற்றுவிக்கும் மொழிகள்:*
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, கொங்கனி, நேபாளி, காஷ்மீரி, குஜராத்தி, மராத்தி, அஸ்ஸாமிஸி, பஞ்சாபி உட்பட பல. இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயிலலாம்.
===
*யார் விண்ணப்பிக்கலாம்?*
1) பணியிலுள்ள ஆசிரியர்கள்: ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் மாநில / மத்திய அரசின் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் / நிதியுதவிப் பள்ளி ஆசிரியர்கள்
2) எதிர்கால ஆசிரியர்கள்: B.Ed / M.Ed / Ph.D முடித்துள்ளவர்கள்
3) பொதுப் பட்டதாரிகள்
===
*ஊக்கத்தொகை:*
ஆசிரியர்களுக்கு அவரவர் தற்போது பெறும் முழுச் சம்பளமும் மாதம் ரூ.800 உதவித் தொகையும் வழங்கப்படும். உரிய தேதியில் ஆண்டு ஊதிய உயர்வும் அகவிலைப்படி உயர்வும் இவ்வலுவலகத்திலேயே வழங்கப்படும். பத்து மாதங்களுக்கும் பணிப் பதிவேடு இவ்வலுவலகத்திலேயே பராமரிக்கப்படும்.
எதிர்கால ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையும் ரூ.800 உதவித் தொகையும்.
பொதுப் பட்டதாரிகளுக்கு ரூ.800 வீதம் மாதாந்திர உதவித் தொகையும்.
(பயிற்சிக் காலமான 10 மாதங்களுக்கும் வழங்கப்படும்)
===
*பயற்சிக் காலம் :*
01.07.2019 முதல் 30.04.2010 முடிய 10 மாதங்கள்
===
*விடுமுறை மற்றும் சுற்றுலா:*
# பிரதி வாரம் சனி & ஞாயிறு வாரந்திர விடுமுறை
# மத்திய அரசின் விடுமுறை நாட்கள் அனைத்தும்
# அக்டோடர் மாதத்தில் 15 நாட்கள் தொடர் விடுமுறை
# ஜனவரி மாதத்தில் முற்றிலும் அரசின் செலவிலேயே 16 நாட்கள் மொழியியல் சூழல் சார்ந்த சுற்றுலா (அந்தந்த மொழிக்கான மாநிலத்திற்கு)
===
*வகுப்பு நேரம் :*
காலை 9:30 to மாலை 4 மணி.
மதிய உணவு இடைவேளை 1 மணி முதல் 2 மணி வரை.
மாலை ஒரு மணி நேர நூலகப் படிப்பு & கலந்துரையாடல் வகுப்பு (விருப்பத்திற்குட்பட்டது).
===
*தேர்வுகள்:*
ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, செய்முறைத் தேர்வு & ஆய்வகத் தேர்வு. பயிற்சியின் முடிவில் *Diploma In Language Education* என்ற பட்டயம் வழங்கப்படும்.
===
*விடுதி :*
அனைத்து மையங்களிலும் விடுதி வசதி உள்ளது. விடுதிக்கட்டணம், மின்கட்டணம் இலவசம். உணவுக்கு மாதாமாதம் டிவைடிங் முறையில் பில் சிஸ்டம்.
*பிற:*
அருமையான நூலக வசதியும், மொழியியல் ஆய்வக வசதியும், விளையாட்டு உபகரணங்கள், மைதானங்களும் உள்ளன. தனித்திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் உள்ளன. மத்திய மொழியியல் நிறுவனத்தால் வெளியிடப்படும் மொழிபெயர்ப்பு, திறனாய்வு, செய்யுள், மொழியியல், அகராதி, பாடல்கள், ஆய்வறிக்கைகள் மற்றும் அனைத்து நூல்களுக்கும் 50% மானியம் (கழிவு).
*விண்ணப்பிக்கும் முறை:*
www.ciil.org இணைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய வழிமுறைப்படி அனுப்ப வேண்டும். கல்விச்சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் உரிய மேலலுவலர் மூலம் அனுப்ப வேண்டும். மேலதிகாரியிடம் ஒப்பம் பெறத் தாமதாகும் பட்சத்தில் தலைமையாசிரியரிடம் ஒப்பம் பெற்று முன்நகல் அனுப்பலாம். ஆனாலும் சேர்க்கையின் போது மேலலுவலரின் ஒப்பத்துடன் கூடிய விண்ணப்பத்தையும் விடுவிப்புச் சான்றையும் முன் சம்பளச் சான்றையும் (LPC) சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் MHRD HIGHER CAS CLG என்ற பெயரில் (மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்) புதுதில்லியில் செலுத்தத் தக்க வகையில் எடுக்கப்பட்ட ரூ.150/-க்கான வங்கி வரைவோலை இணைக்கப்பட வேண்டும். எதிர்கால ஆசிரியர்கள் & பொதுப் பட்டதாரிகள் விண்ணப்பத்தில் யாரிடமும் Forward பெற வேண்டியதில்லை. Ph.D பயின்று கொண்டுள்ளவர்கள் தங்கள் வழிகாட்டி முனைவரிடம் கையொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
மருத்துவ அலுவலரிடம் உடற்தகுதிச் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேரக் கடைசி நாள்: 30.04.2019
No comments:
Post a Comment