மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா சங்கேதனில் நிரப்பப்பட உள்ள 225 மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 225
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: District Youth Coordinator (DYCs) - 100
பணி: Accounts Clerk cum Typist (ACTs) - 73
வயதுரம்பு: 0 1.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff (MTS) - 52
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும், பிளஸ் 2 முடித்து தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. ஓபிசி பெண்கள் ரூ.350. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
http://nyks.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://nyks.nic.in/recruitment/GuidelinesEnglish15032019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2019
No comments:
Post a Comment