எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.03.19

Monday, March 25, 2019




திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

விளக்கம்:

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

பழமொழி

நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்

Only when in the sun do you miss the shade

இரண்டொழுக்க பண்புகள்

 1. இயற்கை வளங்களை அனைத்தும் கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட கொடை.
2. அவற்றை அழிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம். எனவே இயற்கை வளங்களை பேணிப் பாதுகாப்பேன்

பொன்மொழி

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்
- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு

1. இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை எவ்வளவு?

552

2. யூனியன் பிரதேசங்களில் இருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

20

காய்கறிகளை கழுவும் முறை



1.  பூச்சிக்கொல்லி மருந்துகள் காய்கறி மற்றும் பழங்களின் மீது அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கும்.
அது மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும், உள்ளுறுப்புகளுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் காய்கறிகள் மற்றும் பழவகைகளை சாப்பிடுவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அப்படி கழுவுவது மட்டுமே போதுமானதல்ல. மீண்டும் 90 சதவீத நீருடன் 10 சதவீதம் வினிகர் சேர்த்து அதில் காய்கறிகளை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மென்மையாக கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது காய்கறிகளின் தோல் பகுதிக்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது.

2. ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது சமையல் சோடாவும் சேர்த்து அதனை பழங்கள் மீது தெளிக்கவேண்டும். பின்னர் துணியால் சுத்தம் செய்துவிட்டு சாப்பிடலாம். ஒருபோதும் சோப்புகளை பயன்படுத்தி பழங்களையோ, காய்கறிகளையோ கழுவக்கூடாது. தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றை சுடுநீரில் சிறிது நேரம் போட்டுவைத்துவிட்டு பிறகு தோலை உரித்து பயன்படுத்துவது நல்லது.

3. காய்கறிகளை உப்பு நீரில் கழுவுவதும் சிறந்தது. 98 சதவீதம் நீர், 2 சதவீதம் உப்பு கலந்து 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு கழுவி பயன்படுத்தவேண்டும். அதன் மூலம் காய்கறிகளில் படிந்திருக்கும் 80 சதவீத பூச்சிக்கொல்லிகள் நீங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எத்தகைய முறையை பயன்படுத்தி கழுவினாலும் இறுதியில் சுத்தமான ஈரப்பதமுடைய துணியில் துடைத்தெடுக்க வேண்டும்.

English words and Meaning

Rapture.   பரவசம், சந்தோஷம்
Righteous நற்குணமுள்ள,
நேர்மையான
Session.  கூட்டம் நேரம்
சபை நேரம்
Smacks சவுக்கடி ஓசை, சுவை கொடுக்கிற
Visage.     முகபாவம்,
முகத்தோற்றம்

அறிவியல் விந்தைகள்

இரத்த வகைகள்
* ரத்தம் மொத்தமே 4 வகை தான்.
1.A வகை
2. B வகை
3. AB வகை மற்றும்
4. O வகை
இவற்றை தான் ABO பிரிவுகள் என்கிறோம்.

*இந்த நான்கிலும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உண்டு என்பதால்.. மொத்தம் 8 வகையாக பிரித்து வைத்து இருக்கின்றோம்
* ரத்தத்தில் கலந்துள்ள ஆன்டிஜென் என்ற பொருள் மற்றும் ஆன்டிபாடி என்கிற பொருளை வைத்து பிரிக்கப் படுகிறது.
* இந்த ஆன்டிஜென் A மற்றும் B என இரு வகை உண்டு. A யும் B  யும் சேர்ந்து இருந்தால் AB இரத்த வகை இரண்டும் இல்லா விட்டால் 0 வகை அவ்ளோ தாங்க விஷயம்.

Some important  abbreviations for students

* JPEG   -  Joint Photographic Experts Group

* JRC - Junior Red Cross

நீதிக்கதை

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

“எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.

அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.

அதைப்பார்த்த சிங்கம், “ஏய்……..ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே…..எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, “இதோ……என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்……….என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்……….”என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. “இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!” என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!

இன்றைய செய்திகள்
25.03.2019

* தமிழகத்தில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

* சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி எம்பிஏ செமஸ்டர் தேர்வு முடிவு இன்று வெளியாக உள்ளது.

* தமிழக மலைப்பகுதிகளில் அதிகம் விளையும், இதயத்திற்கு பலம் தரும்  வெண்ணைப்பழத்தின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய,  மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸில் முன்னணி வீராங்கனைகளான நவோமி ஒசாகா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

* மலேசியாவில் தொடங்கிய அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஜப்பானை 2 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Today's Headlines

* This year also the temperature will be high: announced by meteorological research center director Mr. Balachandiran.

* The results of the MBA semester examination of Chennai University's distance education will be published today.

* Central and state governments have been requested to improve the production and exports of butter fruit  in the taminadu hills,which is strengthen the heart.

* Naomi Ocaka and Angelic Gerber, the leading winners in the Miami Open tennis, lost.

* India defeated Japan 2-0 in the first match of the Azlan Shah Hockey Cup that began in Malaysia.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One