எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.03.19

Tuesday, March 26, 2019


திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:193

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

விளக்கம்:

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

பழமொழி

Failure teaches success

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை

இரண்டொழுக்க பண்புகள்

 1. இயற்கை வளங்களை அனைத்தும் கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட கொடை.
2. அவற்றை அழிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம். எனவே இயற்கை வளங்களை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி

மனதில் ஓர் உறுதி, வெளியில் சரியான சூழ்நிலை இரண்டையும் உருவாக்கினால், ஆசைப்பட்டதை தள்ளிப்போடாமல் செய்து முடிக்கும் பலம் தானாக வந்து விடும்.
            -   சத்குரு

பொது அறிவு

1. பாராளுமன்ற உறுப்பினரை  தகுதியிழப்பு  செய்யும்  தீர்மானத்தை இயக்குவதற்கு அங்கீகாரம் பெற்றவர் யார்?

 குடியரசுத் தலைவர்

2. இந்திய சட்ட வரைவுக்குழுவின் தலைவர் யார்?

 B.R.அம்பேத்கர்

அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் தீர்வு



 நமது நாட்டில்  மண் சட்டிகளில் சமைப்பதை விடஅலுமினிய சட்டிகளில் சமைப்பது ஒரு நாகரீக வளர்ச்சியாக நம்பப்படுகிறது .
ஆனால் இதில் ஏற்படக்கூடிய தீமைகள் என்ன? என்பதை பாருங்கள்.

1. தற்போதைய ஆராய்ச்சிகளிலிருந்து அலுமினியம்  எமது எலும்புகளை சக்தியிழக்க  செய்கிறது. (week)இலகுவில் முறியக்கூடிய தன்மையைக்  கொடுக்கிறது என அறியவருகிறது.

2. கூடுதலாக வயோதிய காலத்தில் கால் இடுப்பு மூட்டு தேய்ந்து அல்லது உடைந்துபோகச் செய்வது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இரத்தத்தில் உள்ள அலுமினியம்  காலப்போக்கில்  மூளையை சென்றடைந்து மறதியை கூட்டுகிறது. அத்துடன் வயோதிய காலத்தில் மூலையில் அடைந்து (De – posit) deminsia என்பது வரக்காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நம்மை பலவீனப்படுத்துகிறது.

3. செம்பு, பித்தளைப் பாத்திரங்களுக்கு வெள்ளீயம் பூசி பயன்படுத்தினால் உணவுப் பொருட்கள் கெடாது. மண்பாண்டங்கள்தான் சமைக்க மிகச் சிறந்தவை. எந்த வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும். நமக்கு இயற்கை ரெப்ரிஜிரேட்டரே மண்பானைகள்தான். அதில் செய்யப்படும் உணவு மிக சுவையானது.

English words and Meaning

Immunity   நோய் எதிர்ப்புத் தன்மை
Finite.   தீர்ந்த, முடிவடைந்த
Marrow மஜ்ஜை
Resolve.  தீர்மானம்,
மனவுறுதி
Sorrow.     துக்கம், மனவேதனை

அறிவியல் விந்தைகள்

*உலகின் கடினமான பொருள் வைரம்
* மிகவும் இலேசான தனிமம் ஹைட்ரஜன்
* நியூட்ரான் இல்லா ஒரே தனிமம் ஹைட்ரஜன்
* திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம்
* கிராஃபைட் தான் மின்சாரம் கடத்தும் ஒரே அலோகம்

Some important  abbreviations for students

* KG   -  Kinder Garten
* Kg    -  Kilogramme

நீதிக்கதை

ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது.

திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்த போது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது.

வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது.

வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.

ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது.

தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.

இன்றைய செய்திகள்
26.03.2019

* கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் 2 நாட்களாக எரியும் தீயை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

*   இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை    கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி(36) வென்றார். இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஆவார்.

*  10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

* கொளுத்தும் வெயிலில் வாகனங்கள் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பெட்ரோல் விற்பனையகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

* மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் ‘நம்பர்-1’ வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், போராடி வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 The helicopter has been used to prevent further fire from the fire that has been burned in Coimbatore Corporation for two days in vellalur trash godown

🌸Peter Tapasi (36) from Kenya won the International Best Teacher Award this year. He is a mathematics and physics teacher at the Geriko Mixte's School in wani Village, Kenya.

🌸Students and teachers have complained that mathematics question in Class 10  public exam was difficult.

🌸The authorities have advised  to take precautionary measures in petrol bunks  because they have the possibility of burning vehicles in the sun.

🌸 In the third round of the Miami Open Tennis Series, 'number one player, Serbia's Novak Jokovich won the match and qualified for the fourth round.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One