பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி 2012 முதல் இதுவரை தமிழகத்தில் 4 முறை TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர்.அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019 ம்ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது.ஆனால் இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல் OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் எனTRB புதிய விதிமுறைவகுத்துள்ளது. TRBன் இந்த புதிய விதி முறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வுஎழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
கோரிக்கைகள்
1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற UGல் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / STபிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேர முடியும்.
இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்று TET தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் TET தேர்வுக்கென தனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பது சரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்குஎதிரானது. 2. TRBன்இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44%மதிப்பெண்கள் வரை பெற்று B.Ed பட்டம் பெற்ற
M. BC மாணவர்களும்;
40-44 %மதிப்பெண்கள் வரை பெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அவர்களில் B.ED பட்டப்படிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. 3. தமிழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் B.ED.,பட்டப் படிப்பில் சேர UG ல்குறைந்தபட்சம் 40 %மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ்பெற்ற
தமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப்படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,கலசலிங்கம்
பல்கலைக்கழகம் உள்ளிட்ட சிலதமிழகப் பல்கலைக் கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கல்வியியில்கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகுமாணவர்களின் எண்ணிக்கை மிகவும்அதிகம் ஆகும். கடந்த TETதேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு,அவர்களில் சிலர் தேர்ச்சிபெற்றுப் பணி நியமனமும் பெற்றுள்ளனர். 4.தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப்படிப்பில் UGல் 45% க்குக் கீழ்பெற்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். TETதேர்வை UGல் 45% க்குக் கீழ்பெற்ற மாணவர்கள் எழுதமுடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பது முரணானது இல்லையா? எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழகம் மற்றும்பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம் பெற்ற தமிழக மாணவர்கள்அனைவரையும் TET தேர்வுஎழுத அனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்ற பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும்.எனவே
தயவு செய்து தமிழக அரசும் , ஆசிரியர்தேர்வு வாரியமும் B.ED பட்டம்பெற்ற
அனைவரையும் TETதேர்வு எழுத அனுமதித்து உடனடியாக அரசாணை வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு TET தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர்.
No comments:
Post a Comment