வேளாண்மை அதிகாரி பணியிடங்களுக்கானத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வேளாண்மை அதிகாரிகள் பணியிடங்களுக்கானத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற சிலர், தங்களது பெயர் தேர்வானவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வேளாண்மை அதிகாரி பணிக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment